உலுக்கும் கொரோனா..உயிரிழப்பு 26 ஆக உயர்வு..!

0 2515

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டது. நாடு முழுவதும் கொரோனா வுக்கு இதுவரை, 27 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் 2 - வது கட்டத்தில் இருப்பதால், 3 - வது கட்டத்தை எட்டாமல் தடுக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.மஹாராஷ்டிராவில் கொரோனாவுக்கு 186 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கேரளாவில் 202 பேரும், கர்நாடகாவில் 76 பேரும் , தெலங்கானாவில் 66 பேரும் , உத்தரப்பிரதேசத்தில் 65 பேரும், குஜராத்தில் 58 பேரும், ராஜஸ்தானில் 55 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.ஒட்டு மொத்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 24 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை கள் குறித்து, மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் அகர்வால், டெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது, மாநிலம் வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பட்டியல் மற்றும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதனிடையே, படெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில், கொரோனா தடுப்பு பணி - அடுத்த கட்ட நடவடிக்கை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, செய்தி - ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments