புலம்பெயரும் தொழிலாளர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

0 1190

ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தவும், புலம்பெயரும் தொழிலாளர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கால் பணியிழந்த ஊழியர்கள், நடைபயணமாக சொந்த ஊர்களுக்கு திரும்பி வருவதை சுட்டிக்காட்டி, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  அந்த உத்தரவில், ஊரடங்கால் தொழிலாளர்கள் ஏற்கெனவே தங்களது சொந்த பகுதிக்கு சென்று கொண்டிருக்கும்பட்சத்தில், அவர்களை தனிமைபடுத்த வேண்டும் என்றும், அப்படி செய்வதால் கொரோனா பரவாமல் தடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவுகளை அமல்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் தனிப்பட்ட பொறுப்பு  எனவும் கூறப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகமும் தனியே உத்தரவு பிறப்பித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments