புதுச்சேரி பெரிய மார்க்கெட் நாளை முதல் மூடப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

0 822

ஆபத்தை உணராமல் இறைச்சி, காய்கறிகளை வாங்க மக்கள் கூடுவதால் புதுச்சேரி பெரிய மார்க்கெட் நாளை முதல் மூடப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

நெல்லித்தோப்பு மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், காய்கறிகளின் விலை குறித்தும், விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்திய அவர், அருகிலுள்ள வீடுகளில் தானே கிருமிநாசினி தெளித்தார். இதையடுத்து தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் நடந்து கொள்வதால், அத்தியாவசிய கடைகள் இயங்குவதற்கு நேரக்கட்டுப்பாடு விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments