கொரோனா நிதி : 100 கோடி ரூபாய் வழங்குவதாக ஜிண்டால் குழுமம் அறிவிப்பு

0 4603

பிரதமரின் நலநிதிக்கு நூறு கோடி ரூபாய் வழங்குவதாக ஜிண்டால் ஸ்டீல் குழுமம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்குப் பிரதமரின் நலநிதி என்னும் பெயரில் பாரத ஸ்டேட் வங்கியின் டெல்லி முதன்மைக் கிளையில் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிதிக்கு நன்கொடை வழங்குமாறு தொழில் நிறுவனங்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் பொதுமக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் ஜிண்டால் ஸ்டீல் குழுமம் நூறு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஜிண்டால் நிறுவனத்தின் தொழிலாளர் ஒவ்வொருவரும் குறைந்தது ஒருநாள் ஊதியத்தைப் பிரதமரின் நலநிதிக்கு வழங்க உறுதியளித்துள்ளதாகவும் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments