ஒரு வயதுக்கும் குறைவான பச்சிளங்குழந்தை கொரோனாவுக்கு பலி

0 7911

அமெரிக்காவின் சிக்காகோ நகரில், ஒரு வயதுக்கும் குறைவான பச்சிளங்குழந்தை கொரோனாவுக்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த மரணம், அமெரிக்காவில் கொரோனாவுக்கு குழந்தை ஒன்று பலியாகும் முதல் சம்பவம் என்று சிக்காகோ சுகாதாரத்துறை இயக்குநர் என்கோஸி இசிக் (Ngozi Ezike) தெரிவித்தார்.

இந்த தகவல் அமெரிக்க மருத்துவ வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இறப்புக்கு கொரோனாதான் காரணம் என்பதை மேலும் உறுதி செய்வதற்கான விசாரணை நடக்கிறது.

வயதானவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவர்கள் மட்டுமே பெருமளவில் கொரோனாவுக்கு பலியாவார்கள் என கூறப்படும் நிலையில் இந்த பச்சிளங்குழந்தையின் மரணம் கொரோனா குறித்த புதிய ஐயங்களையும் உருவாக்கி உள்ளது.

இந்த குழந்தையையும் சேர்த்து சிக்காகோ நகரம் இருக்கும் இல்லினாயிஸ் மாநிலத்தில் கொரோனாவுக்கு ஒரு நாளில் மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments