ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்குக் கொடையுள்ளம் கொண்டோர் உதவி

0 2182

மகாராஷ்டிரத்தின் நாசிக்கைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் விளைந்த கோதுமையை ஏழை எளியோருக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் தனியார் நிறுவனங்களும், கொடையுள்ளம் கொண்டவர்களும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்கள், இன்றியமையாப் பொருட்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நாசிக்கைச் சேர்ந்த விவசாயி தத்த ராம் பாட்டீல் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் விளைந்த கோதுமையை அந்த ஊரில் உள்ள நிலமற்ற ஏழை எளியோருக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.

3 ஏக்கர் நிலங்கொண்ட சிறு விவசாயியான தத்த ராம், இருப்பதில் பாதியைப் பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் கோதுமையைத் தேவையானோருக்குக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments