கொரோனாவா? கவலையில்லை “அழகிகளுடன் அந்தபுரத்தில் ஐக்கியமான அரசர்”

0 33945

தாய்லாந்து நாட்டில் 1200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசர் (Maha Vajiralongkorn) மகா வஜிரலொங்கோன், ஜெர்மனியின் ஜுக்ஸ்-ஸ்ப்லிட்ஸ் (Zugspitze) மலையடிவாரத்தில், உள்ள நட்சத்திர விடுதியில், 20 அழகிகளுடன், தன்னை தனிமைப்படுத்திகொண்டார்.

கொரோனாவால், தாய்லாந்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கே அல்லாடி வரும் நிலையில், அந்நாட்டு அரசர், தன் அந்தபுரத்தையே ஜெர்மனிக்கு இடம்பெயர்த்திருப்பது, அந்நாட்டு மக்களை கடுங்கோபம் அடைய செய்துள்ளது.

மன்னரை விமர்சித்தால் 15 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றபோதும், தாய்லாந்து மக்கள், அரசர் மகா வஜிரலொங்கோனை, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments