பாதுகாப்புப் படை வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

0 1312

மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து சென்ற இரண்டு பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குவாலியர் அருகே உள்ள தேகான்பூர் என்ற இடத்தில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை முகாமில் பணியாற்றி வந்த 57 வயதான அதிகாரி ஒருவர் இங்கிலாந்தில் இருந்து சமீபத்தில் திரும்பினார்.

இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதேபோல் மும்பையைச் சேர்ந்த தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஏட்டு ஒருவருக்கும் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும், அவர்களின் உறவினர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments