அவசரப் பயணம் மேற்கொள்வோர் வசதிக்காக புதிய கட்டுப்பாடு அறை திறப்பு..!

0 5848

ஊரடங்கு உத்தரவு நேரத்தில் அவசரப் பயணம் மேற்கொள்வோர் வசதிக்காக சென்னை காவல்துறையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில், இறப்பு, திருமணம், மருத்துவத் தேவை ஆகியவற்றுக்கு சென்னைக்குள்ளோ, தமிழகத்துக்குள்ளோ அல்லது வெளி மாநிலத்துக்கோ பயணிப்போர் இந்தக் கட்டுப்பாட்டு அறையை 75300 01100 என்ற செல்லிடப்பேசி எண் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் மற்றும் மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவசரத் தேவைக்கு வெளியே செல்ல அனுமதிச்சீட்டு கோரிக்கை கடிதத்துடன் அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சேவையை அவசரத் தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments