என்று தீரும் அலட்சியம்? ஆபத்துடன் விளையாடும் விபரீதம்

0 2103

லாரிகள் மூலம் சென்னை மாநகரில் விநியோகிக்கப்படும் குடிநீரை, வழக்கம் போல் பெண்கள், அடித்து பிடித்து பிடிக்கிறார்கள். அரசின் கட்டுப்பாடுகளையும், மருத்துவ துறையின் அறிவுறுத்தல்களையும் அலட்சியம் செய்யும் பெண்கள், விபரீதம் புரியாமல் ஆபத்துடன் விளையாடுகிறார்கள். 

வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு , உணவு - காய்கறிகள் - குடிநீர் என அத்தியா வசிய பொருட்கள் எதுவும் தட்டுப்பாடு இல்லாமல் தாராளமாக கிடைக்க, தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன் ஒரு அம்சமாக, சென்னை மாநகர மக்களுக்கு, குடிநீர் வாரியம் சார்பில், வழக்கம் போல், லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தண்ணீர் லாரிகளை கண்டாலே, குடங்களுடன் ஓட்டமும் நடையுமாக, அடித்து பிடித்து, தண்ணீர் பிடிக்கும் பழக்கம், தற்போதைய இக்கட்டான சூழலிலும் மாறவில்லை. இடைவெளி விட்டு நின்று, தண்ணீர் பிடிப்பதற்காக சாலைகளில், வட்ட வடிவ அடையாள குறி போட்டு நிற்குமாறு, அறிவுறுத்திய போதிலும், அரசு விதித்த கட்டுப்பாடுகளையும்,மருத்துவ நிபுணர்கள் வெளியிட்ட அறிவுரைகளையும் இவர்கள் காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

சென்னை மாநகரில் தண்டையார்பேட்டை, புளியந்தோப்பு, கிரீம்ஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், லாரி தண்ணீர் அப்பகுதி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

சிந்தாதிரிப்பேட்டை பகுதியில், முக கவசம் அணியாமல் , எவ்வித பாதுகாப்பு அம்சமும் மேற்கொள்ளாமல், ஏன் - சமூக இடைவெளியை கூட கடைபிடிக்காமல், அலட்சியமாக - எவ்வித அச்சமும் இல்லாமல், பெண்கள் அடித்து பிடித்து தண்ணீர் பிடித்தனர்.

வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது - பொது இடங்களில் கூட்டம் சேருவதை தவிர்க்க வேண்டும் - சுகாதாரத்தை பேணி பராமரிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ள போதிலும், இதுபோன்ற ஒரு சில நிகழ்வுகள், நம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் உலுக்குகின்றன.

குடி நீர் லாரிகளில் தண்ணீர் பிடிக்கும் தாய்மார்கள் தகுந்த இடைவெளியில் நின்று தண்ணீர் பிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் இஅவர்கள் மூலம் இன்னும் பலருக்கு கொரோனா தொற்று பரவ காரணமாகிவிடும் . வரும் முன் காப்பதே புத்திசாலிதனம் என்பதை இம்மக்கள் உணரவேண்டும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments