“ரண களத்துலயும் ஒரு கிலுகிலுப்பு” -கொரோனா நோயாளியின் போனில் டிக் டாக் செய்தவர்கள் பணிநீக்கம்

0 5419

அரியலூரில் கொரோனா பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்திய 3 மருத்துவ தூய்மை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

அரியலூர் அரசு மருத்துவமனையில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த போது அவரது செல்போனில் டிக்டாக் செய்து பதிவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2பெண்கள் உள்பட 3 பேர் அவரிடம் இருந்து செல்போனை வாங்கி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் அந்த 3 பேரையும் பணிநீக்கம் செய்தது மட்டுமின்றி அவர்களையும், கொரோனா வார்டில் தனிமைப்படுத்தி உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments