தமிழகத்தில் மொத்தம் 41 பேருக்கு கொரோனா-பீலா ராஜேஷ்

0 9067

தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை - D.M.S வளாகத்தில் மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவர்கள் தங்கியிருக்கும் 10 மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக கூறினார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு, 2 வது கட்டத்தில் உள்ளதாக பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 41 - வது நபர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் என கூறிய பீலா ராஜேஷ், ஒரே நாளில் மட்டும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என்றார்.

கொரோனா பரவல் 3- வது கட்டத்தை அடையாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் தனிமைபடுத்தப்படும் வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் பீலா ராஜேஷ் விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments