கொரோனா பாதிப்பில் பாதுகாத்துக் கொள்ள, அடிக்கடி முகத்தை தொடுவதை தவிர்க்க வேண்டும் - மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை

0 872

கொரோனா பாதிப்பில் பாதுகாத்துக் கொள்ள, அடிக்கடி முகத்தை தொடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கொரோனா தொற்று உள்ளவர்கள் தும்மும்போது அல்லது இருமும்போது தெறித்த நீர்த்திவலைகள் படிந்துள்ள பரப்புகளை தெரியாமல் தொட்டு விடுவதற்கு வாய்ப்பு உண்டு.

அதே கையால், மூக்கு, கண், வாய் போன்றவற்றை கைகளால் தொடும்போது, உடலுக்குள் வைரஸ் சென்றுவிடும் அபாயத்தை தவிர்க்கவே, 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கைகழுவுவமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

இதைவிட முகத்தை கைகளால் தொடுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. ஆனால் இது அவ்வளவு எளிதல்ல என்பதுதான் ஆய்வுகள் காட்டும் உண்மை.

ஆஸ்திரேலியாவில் 2015ஆம் ஆண்டில் மருத்துவ மாணவர்கள் மத்தியில் மேற்கொண்ட ஓர் ஆய்வில், ஒவ்வொருவரும் சராசரியாக மணிக்கு 23 முறை முகத்தை தொட்டது கண்டறியப்பட்டது.

2008ஆம் ஆண்டில், அலுவலகச் சூழலில் உள்ளவர்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் ஒரு மணி நேரத்திற்கு 16 முறை முகத்தை தொட்டுள்ளனர்.

மருத்துவர்கள் மத்தியில் 2014ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சராசரியாக 19 முறை முறை முகத்தை தொட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments