வீட்டு கண்காணிப்பில் இருந்து தப்பி ஓடிவந்த இளைஞர் கழுத்தை கடித்ததில் மூதாட்டி பலி

0 9399

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வீட்டு கண்காணிப்பில் இருந்து தப்பி ஓடிவந்த இளைஞர் கழுத்தை கடித்ததில், மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

கருப்பசாமி கோயில் காந்திஜி காலனி தெருவை சேர்ந்த மணிகண்டன், இலங்கைக்கு ஜவுளி வியாபாரத்துக்கு சென்றுவிட்டு 24ம் தேதி திரும்பியிருந்தார். வெளிநாடு சென்று திரும்பியவர் என்பதால் வீட்டிலேயே  தனிமைபடுத்தப்பட்ட அவர், வெள்ளிக்கிழமை மாலை தப்பிவந்து சாலையில் ஆடையின்றி (நிர்வாணமாக) ஓடியதுடன்,  வீடு ஒன்றின் வாசலில் படுத்திருந்த 90 வயது மூதாட்டி நாச்சியம்மாளின் கழுத்தை கடித்து குதறியுள்ளார்.

இதில் காயமடைந்த நாச்சியம்மாள், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். முதல்கட்ட விசாரணையில் மணிகண்டனுக்கு மனநிலை பாதித்திருப்பது தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர் மீது போலீஸார் கொலை வழக்கை பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments