வங்கிக் கடன் திரும்பச் செலுத்துவதை 6 மாதம் தள்ளி வைக்க ராமதாஸ் கோரிக்கை

0 1288

வங்கிக்கடன் திரும்பச் செலுத்துவதை 6 மாதம் தள்ளிவைக்க வேண்டும் எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா பரவலால் பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுத்துறை, தனியார்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்ற பல்வேறு வகையான கடன்களுக்கான மாதத் தவணையை அடுத்த 6 மாதங்களுக்குத் தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

காப்பீட்டு பிரீமியம், கடன் அட்டை தவணைகள் ஆகியவற்றையும் 6 மாதங்களுக்குத் தள்ளிவைக்கும்படி வங்கிகளுக்கும் நிறுவனங்களுக்கும் அரசு அறிவுறுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments