அமெரிக்கா செலுத்திய செயற்கைக்கோள் வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தம்

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்கா ஏவிய செயற்கைக் கோள் வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்தச் செயற்கைக் கொள் அந்த நாடு புதிதாகத் தொடங்கியிருக்கும் விண்வெளிப் படைக்கான முதல் செயற்கைக் கோளாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் செலுத்தப்பட்ட ராக்கெட்டில் விண்வெளிப் படையின் முத்திரை இருந்ததாக தெரியவருகிறது.
புளோரிடாவில் உள்ள கேப்கேனவரல் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ராக்கெட் பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டதாக அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.
Comments