கொரோனா பாதிப்பிற்காக கிரிக்கெட் வீரர் தோனி ரூ.1 லட்சம் நிதியுதவி

0 2811

கொரோனா பாதிப்பு நிதியாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி ஒரு லட்ச ரூபாய் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சமயத்தில் ஆதரவற்றோர்களுக்கு உதவுவதற்காக பல தரப்பினரும் தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர். அந்த வகையில் புனேவைச் சேர்ந்த தனியார் அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்பட்ட க்ரௌட் பண்டிங்கிற்கு(crowd funding), தோனி 1 லட்ச ரூபாய் அளித்து உதவியுள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி ஆகியோர் தலா 50 லட்சம் ரூபாய் கொரோனா பாதிப்பு நிதியாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments