லாக்-டவுன் காலத்திலும் நீடிக்கும் சேவைகள் என்னென்ன?

0 428

கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் என்னென்ன சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது என்பதை தற்போது காண்போம்..

நாடு தழுவிய மிகப்பெரிய முதல் ஊரடங்கு இன்று நான்காம் நாளை எட்டியுள்ளது. ஆனால் இந்த ஊரடங்கு காலத்திலும் சில அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்பட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.அனைத்து அரசு, ஊராட்சி, உள்ளாட்சி அமைப்புகளும் செயல்படுகின்றன.

பால், பழங்கள், மளிகைப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்குத் தடையில்லை.எண்ணெய்,உணவுப் பொருட்கள், மருந்துகள், பூச்சிக் கொல்லி போன்றவற்றின் தயாரிப்புகள்,அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி, ரேசன் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மருந்துக்கடைகள், மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள், மருத்துவ சாதன உற்பத்தி மற்றும் ஆய்வு மையங்கள் , மருத்துவ உபகரணங்கள் , சுகாதாரம் தொடர்பான சேவைகளுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.மின்சார உற்பத்தி , விநியோகம், பழுது நீக்குதல் போன்றவை வழக்கம் போல் செயல்படுகின்றன.

இணையம், தொலைபேசி, செல்போன் சேவைகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள் இயங்குகின்றன.அச்சடிக்கப்பட்ட பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள் செயல்பட தடையில்லைகுடிநீர், கழிவுநீரகற்று சேவைகள் தொடர்கின்றன.பெட்ரோல் நிலையங்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சேவை நீடிப்பு
வங்கிகள், ஏடிஎம் மையங்கள், நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைகள் , காப்பீடு சேவைகளும் இயங்கி வருகின்றன.

தபால், கூரியர் சேவைகள் குப்பைகள், மருத்துவக் கழிவுகளை கொண்டு செல்லும் வாகனங்கள், உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், காய்கறிகளை கொண்டு செல்லும் வாகனங்கள், காலியாக சென்றாலோ நிரம்பியிருந்தாலோ தடுத்து நிறுத்த வேண்டாம் என்று காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சேவைகள், காவல்துறை போன்றவையும் செயல்பட்டு வருகின்றன.24 மணி நேர உற்பத்தியில் உள்ள நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு போதிய வசதிகளை செய்து தந்தால் செயல்படலாம்.

செய்தியாளர்கள், ஊடகத்துறையினர் தங்கள் பணிகளை செய்யவும் அவர்கள் வாகனங்கள் சாலைகளில் செல்லவும் எந்த விதக்கட்டுப்பாடும் இல்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments