விழித்தெழு ! கொரோனாவை விரட்டிடு !

0 2825

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது.

ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவின் பல மாநிலங்களையும் உலுக்கி வரும் நிலையில், நாளுக்கு நாள் அதனால் ஏற்படும் பாதிப்பும் உயர்ந்து வருகிறது.

குறிப்பாக, கேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மஹாராஷ்டிராவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தானிலும் அதிகளவில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, மருத்துவர்களின் தீவிர சிகிச்சை முறைகளின் காரணமாக இந்தியாவில் இதுவரை 67 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொடர்ந்து நோய்த்தொற்று பரவுதலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனாவிற்கான அறிகுறிகளை கொண்டிருப்பவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொடர்பான பரிசோதனைகளை நடத்த கூடுதலாக 121 அரசு ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் கொரோனா ஆய்வகங்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு அரசு வலியுறுத்தும் சமூக விலகலை பின்பற்றினால் மட்டுமே, நோய்த்தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்தி உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்பதே நிதர்சனமாக உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments