கொரோனா அச்சுறுத்தலால் நீட் நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு

0 2458

கொரோனா அச்சுறுத்தலால் நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அட்டவணைப்படி நீட் தேர்வுகள் வரும் மே 3-ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் மாணவர்களும், பெற்றொரும் எதிர்கொண்டுள்ள கடின சூழலைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நீட் அட்மிட் கார்டுகளை வெளியிடுவதில்லை என தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. ஊரடங்கை முன்னிட்டு ஜே.இ.இ. மெயின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments