ரயில்வே மருத்துவமனையின் பெண் மருத்துவருக்கு கொரோனா அறிகுறி

0 8204

ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர், கொரோனா அறிகுறியுடன் கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, ஈரோட்டில் செயல்பட்டு வந்த ரயில்வே மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொல்லம்பாளையம் அருகேயுள்ள ரயில்வே காலனிப் பகுதியில், உள்ள அந்த ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர், அண்மையில், போத்தனூர் ரயில்வே மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இவர் அங்கு பணியில் சேர இருந்த நிலையில், கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டது. ஈரோடு ரயில்வே மருத்துவமனையில், அந்த பெண் மருத்துவர் சிகிச்சை அளித்த நோயாளிகளின் பட்டியல், அவர் சந்தித்தவர்களின் பட்டியல், ரயில்வே மருத்துவமனைக்கு வந்து சென்றவர்களின் பட்டியல் ஆகியவற்றை தயாரிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments