கொரோனா சிகிச்சை குறித்து மாவட்ட ஆட்சியர் ராமன் ஆய்வு

0 635

கொரோனா சிகிச்சை மற்றும் கண்காணிப்புப் பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தோனேஷியாவில் இருந்து வந்த 11 பேரில் 4 பேருக்கும், அவர்களது சுற்றுலா வழிகாட்டிக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த 5 பேரும் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உடன் வந்த மற்ற இந்தோனேஷியர்கள் 7 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேர் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் சிகிச்சை மற்றும் கண்காணிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ராமன், மருத்துவர்களிடம் விசாரித்தறிந்தார். மருத்துவமனை வளாகம் முழுவதும் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியையும் தொடங்கிவைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments