ஊரடங்கு உத்தரவையொட்டி மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு நிறுத்தி வைப்பு

0 574

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவையொட்டி மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக அசாதாரண சூழல் நாட்டில் நிலவுவதால் 2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவ மேற்படிப்பு இடங்களை நிரப்புவதற்கான பணிகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், கலந்தாய்வு முதல் சுற்றின் முடிவுகளை வெளியிடுவதையும் நிறுத்தி வைத்துள்ளதாக மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேற்கொண்ட தகவல்களை www.mcc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துக்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments