இரண்டரை மணி நேரத்தில் கொரோனாவை கண்டுபிடிக்கலாம் - Bosch

0 27676

கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் சோதனைக்கு இப்போது பல நாட்கள் அவகாசம் தேவைப்படும் நிலையில், சுமார் இரண்டரை மணி நேரத்தில் கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் விரைவான சோதனை முறையை உருவாக்கி உள்ளதாக பிரபல  ஜெர்மன் மருத்துவ ஆய்வு நிறுவனமான போஷ் (Bosch) தெரிவித்துள்ளது.

இதற்காக Vivalytic molecular diagnostics platform என்ற சோதனை முறையை உருவாக்கி உள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. உலக அளவில் கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் இந்த புதிய பரிசோதனை முறை உதவிகரமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த பரிசோதனை முறை ஏற்கனவே நிமோனியா, இன்புளூவன்சா போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டாலும், இப்போது அது கொரோனாவை கண்டு பிடிக்கும் வகையில் புதிய மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments