ஹலோ..! சவுக்கியமா, எப்படி இருக்கீங்க..? குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் பேசும் கைதிகள்

0 915

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மத்திய சிறைச்சாலைகளில் கைதிகளை சந்திக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் பேசுவதற்கு சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 9 மத்திய சிறைச்சாலைகளிலும், ஒவ்வொரு கைதிகளும் சுமார் 5 நிமிடங்கள் வரை, தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் வீடியோ காலில் பேசினர்.

கொரோனா அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வெளியே இருக்கும் குடும்பத்தினர் நிலை குறித்து கைதிகளும், சிறைக்குள் இருக்கும் கைதிகள் குறித்து, அவர்களது குடும்பத்தினரும் அச்சமடைந்திருந்தனர். வீடியோ கால் மூலம் குடும்பத்தினரிடம் பேச வாய்ப்பு கிடைத்ததற்கு, சிறை கைதிகள் நன்றி தெரிவித்தனர்.

கைதிகளுக்கான வீடியோ கால் சேவைக்கு எந்த வித கட்டணமும் வசூலிக்கப்படாது என கூறிய சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங், இதற்காக 58 ஆண்ட்ராய்டு செல்போன்கள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments