கொரோனா வைரஸ் நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது

0 2936

கொரோனா வைரசால் நுரையீரல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்த வீடியோ காட்சியை அமெரிக்க மருத்துவர்  வெளியிட்டுள்ளார்.

59 வயதான ஆண் நோயாளிக்கு கொரோனா அறிகுறி தோன்றுவதற்குச் சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்தக் காட்சியை வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கீத் மார்ட்மேன் வெளியிட்டுள்ளார்.

அதிக ரத்த அழுத்தம் கொண்ட அந்த நோயாளிக்கு நுரையீரலில் கொரோனா தொற்று பாதித்ததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுவாசக் கருவியின் உதவியுடன் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் காட்சியில் மஞ்சளாகத் தெரியும் பகுதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவை ஆகும். இவ்வாறு பாதிக்கப்படும் நுரையீரல் குணமாக அதிகக் காலம் ஆகும். கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் 2 முதல் 4 விழுக்காட்டினர் குணமாக்க முடியாத வகையில் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர்.

புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறியவும், அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவும் பொதுவாக சிடி ஸ்கேன் எடுக்கப்படுகிறது. மருத்துவர் கீத் மார்ட்மேன் தான் முதன்முறையாக கொரோனா பாதிப்பைக் கண்டறிந்து குணப்படுத்துவதற்காக இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments