கிருமிகளை விரட்டும் கற்றாழைச்சாறு ஹேண்ட்வாஷ்

0 8389

கொரோனா கிருமியை அண்டவிடாமல் விரட்ட, கை சுத்தம் செய்வதற்கான, வைட்டமின் - இ திரவத்துடன், கற்றாழைச்சாறு கலந்த ஹேண்ட் வாஷ் தயாரிப்பில் தேனியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிகுழு பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள, நாள் ஒன்றுக்கு 20 முறை கைகளை சுத்தம் செய்யவும், தேவையானவர்கள் முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவற்றுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், தேனி மாவட்ட நிர்வாகம், ஹேண்ட் வாஷ் தயாரிப்புப் பணியைக் கொடுவிலார்பட்டியைச்சேர்ந்த புதுமை மகளிர் சுய உதவிக்குழுவுக்கு அளித்துள்ளது.

சானிட்டரி நாப்கின் தயாரிப்பில் தமிழக அளவில் பல சாதனைகளை புரிந்த இந்த சுய உதவிக்குழு, தற்போது அரை லிட்டர் பாட்டில்கள் கொண்ட ஹேண்ட் வாஷ் தயாரிப்பில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது.

வைட்டமின் - இ திரவத்துடன், கற்றாழைச்சாறு கலந்த மூலப்பொருள்களை பெரிய கேனில் ஊற்றி, 30 மணி நேரம் கழித்து தேவைக்கேற்ப தண்ணீர் கலந்து பாட்டில்களில் அடைத்து வழங்கப்படுகிறது. சிறந்த கிருமி நாசினியாக செயல்படுவதுடன் இதுதோலுக்கு எந்தவித எரிச்சலையும் ஏற்படுத்துவதில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் தெரிவித்தனர்.

இதுவரை 500 லிட்டர் வீதம் மூன்று ஆர்டர்கள் வந்ததில், இரு ஆர்டர்களை முடித்து, தற்போது மூன்றாவது ஆர்டருக்காக ஹேண்ட்வாஷ் தயாரித்து வருவதாகவும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தாங்களே ஹேண்ட் வாஷ் தயாரித்து வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments