கொரோனா பாதிப்பு - 724 ஆக உயர்வு

0 5164

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 720ஐத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களில் பலருக்குக் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தனிமை வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 14 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறி தென்படுவோருக்குச் சளி மாதிரி எடுத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் இந்தியர்கள் 677 பேர், வெளிநாட்டவர் 47 பேர். 67 பேர் சிகிச்சைக்குப் பின் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். 17பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர். 640 பேருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாநிலவாரியாகப் பார்த்தால் மகாராஷ்டிரத்தில் 129 பேரும், கேரளத்தில் 127 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் 55 பேரும், குஜராத்தில் 42 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 40 பேரும், ராஜஸ்தானில் 39 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments