ஏழை எளியோருக்கு உணவு சமைத்து பரிமாறிய காவல்துறையினர்..!

0 1868

முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் காவல்துறையினர் உணவு சமைத்து வழங்கி வருகின்றனர்.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் வீடின்றிச் சாலையோரம் வாழ்பவர்களுக்கும் வேலையிழப்பால் வருமானமின்றித் தவிப்பவர்களுக்கும் உணவு வழங்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அதன் ஒருபகுதியாகப் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காவல்துறையினர் உணவு சமைத்து எடுத்துச் சென்று வெட்டவெளியில் கூடாரம் அமைத்துத் தங்கியுள்ளவர்களுக்கு வழங்கினர்.

இதேபோல் உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் காவல்துறையினர் சப்பாத்தி, பூரி உள்ளிட்ட உணவு வகைகளைத் தயாரித்து ஏழை எளியோருக்கும் வீடற்றவர்களுக்கும் வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments