திரைப்பட நடிகர் சேதுராமன் மாரடைப்பால் மரணம்

0 33494

கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் சேதுராமன் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 37. இந்த படத்தில் சந்தானம் பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் சேதுராமன் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருந்தனர்.

தோல் மருத்துவம் படித்துள்ள இவர் சென்னையில் மருத்துவமனை நடத்தி வந்தார். நேற்று முன் தினம் இன்ஸ்டாகிராமில் கொரோனா விழிப்புணர்வு குறித்து மக்களிடையே பிரச்சாரம் செய்திருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் சேதுராமன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments