கிருமி நாசினி, முகக்கவசம் தயாரிக்கும் ஆர்.பி.எஃப்..!

0 2678

ரயில்வே பாதுகாப்பு படைக்கு தேவையான கிருமி நாசினி மருந்துகளையும், முக கவசங்களையும் ரயில்வே பாதுகாப்பு படையினரே தயாரித்து பயன்படுத்திக்கொள்கின்றனர்.

மக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதுடன், கிருமி நாசினி மருந்துகளும், முக கவசங்களும் கொரோனோ வைரஸ் பரவலை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் அவற்றுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதாக புகார் கூறப்பட்ட நிலையில், முக கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கு தேவையான முக கவசங்களை தாங்களே தயாரித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு படையினரும் தங்களுக்கு தேவையான கிருமி நாசினி மற்றும், முககவசங்களை சென்னை அயனாவரம் ரயில்வே பண்டகசாலையில் தயாரித்து வருகின்றனர்.

ஹைசோ புரோபைல் ஆல்கஹால் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட வேதிப்பொருள்களை அதற்கான விகிதாச்சாரப்படி தண்ணீரில் கலந்து கிருமிநாசினி தயாரிக்கப்படுகிறது. மேலும் தரமான துணியால் முக கவசம் தயாரிக்கும் பணியில் ஆர்பிஎப் பெண் காவலர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

சென்னை மண்டலம் மட்டுமல்லாது தென்னக ரயில்வேயின் அனைத்து மண்டலத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் இவை வழங்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments