அத்துமீறிய தம்பிக்கு முட்டி வைத்தியம் காட்டிய போலீஸ்..!

0 51306

ஊரடங்கை மீறி சாலையில் வாகனத்தில் சுற்றித்திரிந்த தம்பி ஒருவர், பெண் போலீசாரிடம் சவால் விடும் வகையில், வீராவேசமாக முழங்கியதால், அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்ற காவல்துறையினர் முட்டிவைத்தியம் செய்து அனுப்பி வைத்தனர். 

கொரோனா நோய்க் கிருமியை கட்டுப்படுத்துவதை விட, அடங்க மறுத்து அத்துமீறும், இவர்களை போல தம்பிகளை சமாளிப்பது காவல்துறையினருக்கு சற்று கடினமான பணிதான்..! என் ஊர் என்னோட கோட்டை இப்படித்தான் சுற்றுவேன், உத்தரவு போட்ட முதலமைச்சரை வரசொல் என்று போலீசாரிடம் நெஞ்சுவிடைக்க முழங்கும் இந்த தம்பி அடுத்து நடக்க இருக்கும் சம்பவத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை..!

கட்சி மேடைகளில் யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், கையை நீட்டி குரலை உயர்த்தி என்ன வேண்டுமானாலும் பேசலாம், சம்பந்தப்பட்ட கட்சியினரை தவிர யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் நாடு முழுவதும் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில், கை உயர்த்தி குரலை உயர்த்தி உடம்பை முறுக்கினால், இப்படி சில அடிகள் விழத்தான் செய்யும்..!

ஊருக்குள் கடைகள் எல்லாம் அடைத்திருக்க, செருப்பு வாங்க போவதாக விளக்கம் அளித்த டிப்ளமோ என்ஜீனியரான தம்பி, முககவசம் உள்ளிட்ட எந்த ஒரு முன் எச்சரிக்கையையும் பின்பற்றாமல் இரு சக்கர வாகனத்தில் ஊருக்குள் சுற்றியதோடு, அதை கண்டித்த பெண் போலீசாரிடம் வீதியில் நின்று, வீம்புக்கு உலக அரசியல் தொடங்கி, உள்ளூர் அரசியல் வரை முழங்கியதால், மண்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்..!

பொதுவாக அரசியல் மேடையில் பேசுவோர் தப்பிவிட வாய்ப்புண்டு, இணையத்தில் போலி கணக்கில் இது போல இஷ்டத்துக்கு பேசிவிட்டு தப்பிவிடலாம்..! ஆனால் இப்படி வீதியில் நின்று வீம்புக்கு பேசும் தம்பிகள் போலீசிடம் இருந்து தப்பிக்க வாய்பே இல்லை என்பதை உணரவேண்டும்..!

ஏனெனில் கொரோனாவுக்கு போராளி என்றெல்லாம் பிரித்துப்பார்க்க தெரியாது..! தம்பிகள் உலகம்... தனி உலகம் என்றாலும் வீட்டிலேயே இருங்கள், கொரோனா குறித்த விழிப்புணர்வுடன், கொஞ்சம் அடங்கியே இருங்கள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments