பால் விற்பனை அனைத்து நேரமும் கிடைக்கும் -தமிழக அரசு திட்டவட்ட அறிவிப்பு

0 2105

தமிழ்நாட்டில் அதிகாலை 3.30 மணியிலிருந்து காலை 9 மணி வரை மட்டுமே தனியார் பால் விற்கப்படும் என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சங்க நிறுவனரும், மாநிலத் தலைவருமான பொன்னுசாமி வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா விவகாரத்தில் பொதுமக்களின் அஜாக்கிரதை, மெத்தனத்தால் பால் முகவர்கள் காவல்துறை நடவடிக்கைகளுக்கு ஆளாகி பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில்லறை கடைகளுக்கு தனியார் பால் விநியோகம் செய்வதில்லை என்றும், முகவர்களின் கடைகளில் மட்டும் பால் விற்பனை செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆவின் பால், எப்போதும் போல், அனைத்து நேரத்திலும், தடையின்றி கிடைக்கும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments