வாட்ஸ் அப் வீடியோ.. வீட்டில் இருந்தே வைத்தியம்..!

0 2000

பல்வேறு உடல்நலக்குறைவுற்றவர்கள், மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் கண்காணிப்பில் இருப்போர், மருத்துவர்களை நேரில் நாடிச்செல்ல முடியாத நிலையில் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் உடல் நிலை குறித்து அறிந்து, மருந்து மாத்திரைகளை பரிந்துரை செய்து பெற்றுக்கொள்கிறார்கள்.

நாடு முழுக்க ஊரடங்கு மற்றும் 144 தடை அமலில் இருப்பதால் வீடுகளிலேயே மக்கள் முடங்கி இருக்கிறார்கள். இதில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகள், பல்வேறு அறுவை சிகிச்சை மேற்கொண்டு வீட்டில் இருந்தவாறு மருந்து மாத்திரை எடுத்து வருபவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் உள்ளிட்ட தொடர் மருத்துவ பரிசோதனைக்காக செல்பவர்களும் முடங்கி இருக்கிறார்கள்.

இதுபோன்றவர்களுக்கு உதவ சுகாதாரத்துறை ஹெல்ப் லைன்கள் இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில், கொரோனோ வைரஸ் தடுப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதால், சாதாரண நோயாளிகளுக்கு செல்போன் வாட்ஸ் அப் கைகொடுத்து வருகிறது. அவர்கள் வாகனங்களில் மருத்துவ மனைகளுக்கு நேரில் செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தே வாட்ஸ் அப் வீடியோ காலில் குடும்ப மருத்துவர்களை தொடர்பு கொண்டு, தேவையான மருத்துவ உதவியை பெற்று வருகின்றனர்.

மேலும் மருந்து தேவைப்படும் பட்சத்தில் நோயாளிகளை அருகில் உள்ள மருந்துகடைகளுக்கு மருத்துவர்கள் அனுப்பி, செல்போனிலேயே தேவையான மருந்துகளை பரிந்துரை செய்து பெற்றுக்கொள்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments