கொல்கத்தா காய்கறி சந்தையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆய்வு

0 1654

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள காய்கறி சந்தையில் ஆய்வு செய்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வியாபாரிகள் சமூக விலகலை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தினார்.

கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் மம்தா அதிரடி ஆய்வு செய்து வருகிறார்.

அதனொருபகுதியாக, கொல்கத்தா மார்க்கெட் பகுதியில் முகக்கவசம் சகிதமாக ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு தூய்மை மற்றும் சமூக விலகளை கடைப்பிடிக்க வியாபாரிகளை அறிவுறுத்தினார்.

மேலும், ஒருமீட்டர் இடைவெளியில் தாமே கட்டம் போட்ட மம்தா, அந்த இடைவெளியில் விற்பனையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments