144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 1252 பேர் மீது வழக்குப்பதிவு

0 1124

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதற்காக நேற்று மட்டும் 1,252 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், சென்னையில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பு அமைத்து வீதியில் உலா வரும் நபர்களை காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

சென்னையில் நேற்று மாலை 6 மணியில் இருந்து இன்று காலை 6 மணி வரை தடை உத்தரவை மீறியதாக, 53 வழக்குகள் பதிவாகியுள்ளது.

அதே போன்று சமூக வலைதளங்களில் கொரோனா குறித்து வதந்தி பரப்பிய 16 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், சுய தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி வெளியே வந்த 6 பேர் மீது வழக்கு பதிந்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments