காவல்துறையில் 50 வயதுக்கு மேற்பட்ட போலீசாருக்கு ஓய்வு

0 29992

சென்னை கிழக்கு மண்டல காவல்துறையில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட போலீசார் வீட்டிலேயே இருந்து ஓய்வெடுக்குமாறு கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் அறிவுறுத்தியுள்ளார்.

வாக்கி டாக்கி வாயிலாக இந்த அறிவுறுத்தல்களை வழங்கிய அவர், நீரிழிவு உட்பட எவ்வித நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் அந்த காவலர்கள் ஓய்வு எடுக்குமாறு உத்தரவிட்டார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் காவல்துறையினரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். இதேபோல் பிற மண்டலங்களிலும் பாதுகாப்பை கருதி மனிதாபிமான முறையில் காவலர்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments