டிக் டாக் சாகசத்தால் நிகழ்ந்த விபரீதம்: இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி

0 22044

டிக் டாக்கில் பந்தயம் கட்டி, கழிப்பறை கோப்பையை நாக்கால் தொடுவது போன்று வீடியோ பதிவிட்ட அமெரிக்க இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த லார்ஸ் (Larz) என்ற இளைஞர், கொரோனா தொற்றுள்ள நபர்கள் பயன்படுத்திய பொருட்களில் இருந்து, அந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவாது என்று நிரூபிப்பதாக கூறி டிக் டாக்கில் பந்தயம் கட்டியுள்ளார். அதற்காக, டாய்லெட் சீட்டுகளை நாவால் தொடுவது போன்ற வீடியோவையும் அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோ பதிவிட்ட சில நாட்களிலேயே தமக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என சிகிச்சையில் இருக்கும் புகைப்படத்தை லார்ஸ் பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸின் ஆபத்தை உணராமல் சமூகவலைதள பெருமைக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இதுவே சாட்சியாகும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments