வங்கிகள் EMI வசூலிப்பை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

0 20898

அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

வட்டிகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க அவர் கோரியுள்ளார். 21 நாள் ஊரடங்கு உத்தரவு வரவேற்கத் தக்க நடவடிக்கை என்று தெரிவித்துள்ள அவர், நெருக்கடியான நேரத்தில் பாகுபாடுகளை மறந்து நாட்டுக்கும் மனித குலத்துக்கும் கடமை ஆற்ற வேண்டியது முக்கியம் என்றும், அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைக்க காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பினரின் வங்கிக் கணக்குகளில் 7,500 ரூபாய் உதவி நிதி, குடும்ப அட்டைகளுக்கு தலா 10 கிலோ விலையில்லா அரிசி அல்லது கோதுமை, பாதிக்கப்பட்ட தொழில்துறைகளுக்கு நிவாரண உதவி உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments