ஈரானில் 2 ஆயிரம் படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையை திறந்துள்ள ராணுவத்தினர்

0 1648

 ஈரானில் 2,000 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை திறப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் 2 ஆயிரம் படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையை ராணுவத்தினர் திறந்துள்ளனர்.

லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்கள், சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்காக தெஹ்ரான் சர்வதேச கண்காட்சி மையத்தை 2 நாட்களில் மருத்துவமனையாக ராணுவ வீரர்கள் மாற்றியமைத்துள்ளனர்.

பொது வார்டுகள், ஐ.சி.யூ, ஆபரேஷன் அறை, மருத்துவ சாதனங்கள் பொருத்தப்பட்ட ஆய்வகம் என அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள இந்த மருத்துவமனை மூன்று தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments