கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு...

0 3539

குமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த 40 வயது நபர்  உயிரிழந்தார். 

குவைத்தில் பணிபுரிந்து கடந்த 3 ஆம் தேதி சொந்த ஊரான கோடிமுனை திரும்பிய அவருக்கு மூளைக் காய்ச்சல் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டிலேயே தங்கி இருந்த அவருக்கு நேற்று மூச்சு திணறல் மற்றும் சளி காய்ச்சல் ஏற்பட்டதால் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில்  அனுமதிக்கப்பட்டார்.

  இவரது சளி மற்றும் ரத்த மாதிரிகள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்றுகாலை உயிர் இழந்தார். ஆய்வு முடிவு வந்த பின்னரே அவர் கொரோனாவால் உயிர் இழந்தாரா? அல்லது மூளை காய்ச்சல், கல்லீரல் பாதிப்பா என்பது தெரியவரும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments