இந்தியாவில் தொடரும் கொரோனா அச்சுறுத்தல்..!

0 7152

கொரோனா பாதிப்பால் ஜம்மு - காஷ்மீர், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்தை அடுத்து, இந்தியாவில் பலி எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு உட்பட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 650ஐ தாண்டியுள்ளது.

மேலும் 4 பேர் உயிரிழந்ததை அடுத்து, நாடு முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில் 65 வயது மத போதகர் ஒருவர் பலியானதை அடுத்து, அங்கு முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 4வதாக பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 73 வயது நபர் பலியானார்.குஜராத்தில் 3வது பலியாக 70 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.

அதிகபட்ச பாதிப்புகளை சந்தித்து வரும் மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, தானே, நாக்பூரில் தலா ஒருவருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து கேரளாவில் 118 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தெலங்கானாவில் 44 பேரும், குஜராத்தில் 43 பேரும், கர்நாடகாவில் 41 பேரும், ராஜஸ்தானில் 40 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

டெல்லியில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் சூழலில், பயணிகளின் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சோதித்த பின்னரே பேருந்துகளில் பயணிக்க அனுமதிப்பதாக ஓட்டுநர்களும், நடத்துநர்களும் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு மாநிலங்களில் சிக்கித்தவித்து வரும் தங்கம் மாநில மக்களுக்கு அடைக்கலம் அளிக்கக் கோரி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு உட்பட 18 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அத்தியாவசிய கடைகளை ஆய்வு செய்த மம்தா, சமூக விலகலை கடைபிடிப்பதற்காக கடை ஒன்றின் முன்பு தானே வட்டங்களை வரைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments