காசிக்கு போயும் கஷ்டம் தீரவில்லை..! அழவைத்த ஆன்மீக சுற்றுலா

0 6346

நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சென்னையைச் சேர்ந்த 25 பேர், தாங்கள் ஊர் திரும்ப இயலாமல் தவிப்பதாகவும், மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். காசிக்குப் போயும் கஷ்டம் தீராத பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. 

காசிக்கு போனால் பாவங்கள் தீரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை... இதனால் வயதான காலத்தில் காசிக்கு செல்வதை பலர் வழக்கமாக செய்து வருகின்றனர்.அந்தவகையில் சென்னை கொருக்குப்பேட்டையில் இருந்து 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 35 பேர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து 15 நாள் ஆன்மீக சுற்றுலா சென்றிருந்தனர்.

நாடு இருக்கும் நிலையில் சுற்றுலா தேவைதானா என்ற முன் எச்சரிக்கை இன்றி சுற்றுலா புறப்பட்டவர்கள் அலகாபாத், அயோத்தி மற்றும் நேபாளம் ஆகிய இடங்களில் ஆன்மிகத் தலங்களை சுற்றிப் பார்த்தனர், காசி மற்றும் கயாவிற்கு சென்றபின் சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில் 25ந்தேதி திடீரென நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு அமலுக்கு வந்ததால் நேபாள எல்லையான சோனாலியில் சாலைகள் மூடப்பட்டன. இதனால் நேபாளத்தில் இருந்து எந்த இடத்திற்கும் செல்ல இயலாமல் 35 தமிழர்களும் தவித்து வருகின்றனர். தங்களை அங்கிருந்து மீட்டு சென்னைக்கு அழைத்து செல்ல மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்னும் 20 நாட்கள் சாலைகள் திறக்கப்படாது என்பதால், ரெயில்கள் இயக்கப்படாது என்பதால் தங்கள் வாழவே கேள்வி குறியாகி இருப்பதாக அச்சத்தில் உள்ளனர். பிரதமர் மோடி தங்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

 தமிழகத்தில் இருந்து வெளியூர் மற்றும் வெளி நாடு பயணம் மேற்கொள்வோர் உலகில் என்ன நடக்கிறது,? ஊர் நிலவரம் என்ன ? எந்த சூழ்நிலையில் வெளியில் சுற்றுலா செல்கிறோம் என்பதை உணர்ந்து பயணித்தால் அவர்களுக்கும், அவர்களை சார்ந்தோருக்கும் நல்லது, இல்லையெனில் மொழி தெரியாத தேசத்தில் இப்படித்தான் பதற்றத்துடன் தவிக்க நேரிடும்..! காசிக்கே சென்றாலும் கஷ்டம் தீராது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments