பல முக்கிய சாலைகளில் முற்றிலுமாக தடுப்பு ஏற்படுத்திய போலீசார்

0 2509

சென்னையில் 144 தடையை மீறி தேவையில்லாமல் பலர் இருசக்கரவாகனங்களில் சுற்றித்திரிவதால், போலீசார் பல முக்கிய சாலைகளில் முற்றிலுமாக தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

சென்னையில் ஏற்கனவே 400க்கும் மேற்பட்ட தடுப்புகளை அமைத்துள்ள போலீசார், தேவையில்லாமல் வெளியே வரும் பொதுமக்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.அத்தியாவசிய தேவைக்காக செல்லும் நபர்களும், வாகனங்களும் மட்டும் அனுமதிக்கப்படும் நிலையில், வெறிச்சோடிய சாலைகளில் இளைஞர்கள் பலர் வாகனங்ளில் திரிவதோடு, அத்தியாவசிய பொருட்கள் வாங்குகிறோம் என்றும் தொடர்ந்து வெளியில் வருகின்றனர்.

அவர்களை கட்டுப்படுத்துவதற்காக, போலீசார் காமராஜர் சாலை உட்பட முக்கிய சாலைகளில் கூடுதலாக தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments