இந்தியாவை அச்சுறுத்தும்.. கொரோனா பாதிப்பு..!

0 4121

இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும், அந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 2ஆவதாக உயிரிழந்த நபருடன் சேர்த்து, இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மும்பையை சேர்ந்த 5 பேர் மற்றும் தானேவை சேர்ந்த ஒருவர் உட்பட மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்க 122ஆக அதிகரித்துள்ளது. அதற்கடுத்தபடியாக கேரளாவில் 8 வெளிநாட்டவர்கள் உட்பட 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் 41 பேரும், உத்தரபிரதேசம், தெலங்கானாவில் தலா 35 பேரும், ராஜஸ்தானில் 32 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தூரில் புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 5 பேருடன் சேர்த்து, மத்தியப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே சமீபத்தில் அம்மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு, முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தின் செய்தியாளர் சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பத்திரிகையாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 17ம் தேதி லண்டனில் இருந்து திரும்பிய அவரது மகளுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி, மகன் மற்றும் வீட்டில் பணிபுரிவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை.

மணிப்பூரை தொடர்ந்து மிசோரமில் முதல் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமிலிருந்து திரும்பிய பாஸ்டர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பீகாரில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

இதனிடையே நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை முழுமையாக பின்பற்றினால் 89 சதவீதம் அளவுக்கு பாதிப்புகள் குறைய வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

டெல்லியில் மருத்துவர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள் பெரும்பாலானோர், தாங்கள் குடியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு உரிமையாளர்கள் வற்புறுத்துவதாக புகார் அளித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments