மருத்துவர்களுக்கு சுழற்சி அடிப்படையில் ஓய்வு..!

0 1289

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள்  சுழற்சி அடிப்படையில், ஒரு வாரம் வரை, அவரவர் வீடுகளில் மருத்துவ கண்காணிப்பில் தங்கி கொள்ள, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அரசு  மருத்துவமனையில் உள்ள பல்வேறு துறையில் 9 பேர் பணியில் இருந்தால், சுழற்சி அடிப்படையில் அதில் 3 பேர் ஓய்வு எடுக்க உத்தரவிட்டுள்ள மருத்துவ கல்வி இயக்குநரகம் ,  ஓய்வின் போது, மருத்துவர்கள் வெளியில் செல்ல கூடாது என்றும், அவசர காலம் ஏதேனும் நேர்ந்தால், உத்தரவை ஏற்று உடனடியாக பணிக்கு திரும்பும் வகையில் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments