கொரோனா எதிரொலி: விமானங்களை பார்க்கிங் செய்ய இடமின்றி விமான நிறுவனங்கள் தவிப்பு

0 6092

கொரோனா எதிரொலியான விமானப் போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பார்க்கிங் செய்ய இடமின்றி விமான நிறுவனங்கள் புதுவிதமான சிக்கலை சந்தித்து வருகின்றன.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலா ஏர்போர்ட்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் டாக்சி நிறுத்துமிடம், பராமரிப்பு நிலையங்கள், ஓடுபாதைகள் அனைத்தும் விமானம் நிறுத்துமிடங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், ஹாங்காங், சியோல், பெர்லின், வியன்னா உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களிலும், விக்டர்வில்லி, கலிபோர்னியா மற்றும் அரிசோனா விமான நிறுத்துமிடங்களும் விமானங்களால் நிரம்பி வழிகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments