கொரோனாவின் மையமான நியூயார்க்..!

0 2827

ஊகான், இத்தாலியை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம் கொரோனா வைரஸ் பரவலின் மையமாக மாறியுள்ளது.

80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் நியூயார்க்கில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், 157 பேர் பலியாகியுள்ளனர்.

15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அமெரிக்கா முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும். தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பாதிப்பு அதிகரித்து வருவதால், பாதிப்பு உச்சத்தை எட்டும் போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரை தனிமைப்படுத்த தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அந்நகர மேயர் ஆண்ட்ரீவ் க்யூமோ தெரிவித்துள்ளார். தற்போது அங்கு 53 ஆயிரம் பேரை தனிமைபடுத்த தேவையான படுக்கைகளே உள்ளன.

இதனால் கொரோனாவின் மையமாக நியூயார்க் மாறியுள்ள நிலையில், அதிகரித்து வரும் பாதிப்பை சுட்டிக் காட்டி அமெரிக்காவே கொரோனா மையமாக மாறும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments