கொரோனாவை விட கொடியவர்கள்..! பாரின் ரிட்டன் பார்ட்டிகள் மீது வழக்கு

0 9128

சீனா மற்றும் ஈராக் நாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பியதால், வீட்டில் தனிமைபடுத்தப்பட்ட 3 பேர் , தடையை மீறி நோய் தொற்றை பரப்பும் விதமாக வெளியில் சுற்றியதாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொறுப்பில்லாமல் வீதியில் வலம்வந்தவர்கள் பிடித்துச்செல்லப்பட்டு தனிமைபடுத்தப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

வெளி நாட்டிற்கு சென்று வந்தவர்கள் வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்றும் அவர்கள் மூலமாகத்தான் கொரோனா பரவுகிறது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் அண்மையில் சீனா சென்று விட்டு சென்னை திரும்பிய அண்ணா நகரை சேர்ந்த லஷ்மணன் அருண் என்பவர் செவ்வாய் கிழமை வெளியில் சுற்றி திரிந்தார் அவரது கையில் தனிமைப் படுத்தப்பட்டவர் என்ற அரசின் முத்திரை இருந்ததால் உடனடியாக அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி தனிமைப்படுத்திய காவல் துறையினர் அவர் மீது நோய் தொற்றை பரப்ப முயன்றதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதே போல சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகரை சேர்ந்த ஜகுபர் சாதிக், அவரது மகன் தபீப் பீர் முகம்மது ஆகிய இருவரும் கடந்த 22 ந்தேதி ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் இருந்து சென்னைக்கு திரும்பியுள்ளனர்.

அவர்களை வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறித்திய நிலையில் கடந்த 22 ந்தேதி தந்தையும் மகனும் வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டதாக சுகாதாரதுறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அவர்கள் எந்த ஊர் சென்றனர் என்பது தெரியாததால் அவர்கள் மூலமாக மேலும் சிலருக்கு கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுவதால் அவர்கள் மீது நோய் தொற்றை பரப்ப முயன்றதாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.

வெளி நாடுகளில் இருந்து வரும் போது தாங்கள் கொண்டு வரும் சாக்லேட் வாசனை திரவியம் போன்ற பொருட்களை பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்டாலும் கொடுப்பதில்லை, ஆனால் தங்கள் மூலமாக நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என தெரிந்தும் ஊர் சுற்றி நோய் பரபும் இது போன்ற நபர்களுக்கு மேற்கு வங்க போலீசார் பாணியில் நம்ம ஊரு காவல்துறையினரும் பிரம்பு வைத்தியம் செய்தால் மட்டுமே வெளியில் செல்லவும், இஷ்டத்துக்கு ஊர் சுற்றவும் அஞ்சுவார்கள் என்கின்றனர் மருத்துவர்கள்

மனிதர்களை கொல்லும் கொள்ளை நோய் கிருமியை ஊர் ஊராக பரப்பும் இத்தகைய பொறுப்பில்லாத பாரின் ரிட்டன் நபர்களிடம் மனித நேயத்தை பார்த்தால் எந்த ஒரு உத்தரவையும் இங்கே செயல்படுத்த இயலாது என்பதால், காவல் துறையினர் சற்று கடுமையாகவே புரியவைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments