கொரோனா சிகிச்சைக்கு மலேரியா தடுப்பு மருந்தினை கண்மூடித்தனமாக பயன்படுத்தக் கூடாது-மத்திய அரசு எச்சரிக்கை

0 7197

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மலேரியா தடுப்பு மருந்தினை கண்மூடித்தனமாக பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில், மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் சிறியளவில் பலனளிப்பதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து மருந்தகங்களில் அந்த மருந்தினை வாங்க ஏராளமானோர் அலைமோதியுள்ளனர்.

இதையடுத்து மருத்துவர் பரிந்துரையின்றி கண்மூடித்தனமாக அந்த மருந்தினை பயன்படுத்துவது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ள மருத்துவர்கள், பாதிப்புக்குள்ளாகி தொடர்ந்து கண்காணிப்பிலுள்ள குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சோதனை அடிப்படையில் அதனை பயன்படுத்துவதாகவும், அதனை அனைவராலும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தன்னிச்சையாக மருந்துகளை கையாள்வது நிச்சயம் ஆபத்தில் முடியலாம் என்றும் எச்சரிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments